மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது பஸ் மோதி தம்பதி சாவு

வீரபாண்டி அருகே மகள் திருமண அழைப்பிதழை கொடுக்க சென்றபோது ஸ்கூட்டர் மீது பஸ் மோதியதில் தம்பதியினர் பரிதாபமாக இறந்தனர்.

தேனி:

வீரபாண்டி அருகே உள்ள போடேந்திரபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி என்ற மூர்த்தி (வயது 53). தனியார் பள்ளி தாளாளர்.

இவரது மனைவி மகேஸ்வரி (48). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இவர்கள் தங்களது மகளுக்கு திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றனர்.

இதையடுத்து முத்துதேவன்பட்டி பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பாக மொட்டனூத்தை சேர்ந்த பஸ் டிரைவர் தங்கபாண்டி (50) மீது வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்