காரியாபட்டி,
காரியாபட்டி, எஸ். கடமங்களம் விலக்கு அருகே கார் கவிழ்ந்த விபத்தில் நகைக்கடை அதிபர் ராமகிருஷ்ணன் பலியானார். இதில் காயமடைந்த முருகேசன் (வயது 52), பிச்சை (40) ஆகிய 2 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி முருகேசன் பலியானார். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.