தவறி விழுந்தார்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலை உள்ளது. இங்கு 25 அடி உயரத்தில் சிமெண்டு ஓடுகள் பொருத்தும் பணியில் நேற்று சிலர் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
வேலை செய்து கொண்டிருந்த காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா கலியாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி பலராமன் (வயது42) என்பவர் மேலிருந்து அதாவது 25 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
சாவு
இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் உயிரிழந்த பலராமனுக்கு தனலட்சுமி (42) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்.