மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருட்கள் அனுப்பி வைப்பு

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 2-ம் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு வாகனங்கள் மூலம் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக நேற்று கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனப்பள்ளி, சூளகிரி மற்றும் கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருட்கள் அனுப்பும் பணி நடந்தது.

அதன்படி வாக்குப்பெட்டிகளும், மெழுகுவர்த்தி, முத்திரை தூக்கு, தீப்பெட்டி, அரக்கு, ஒட்டுப்பசை, கரிமத்தாள் உள்ளிட்ட 70 தேர்தல் பொருட்களையும் மினி லாரி மூலம் வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன், தேர்தல் அலுவலர்கள் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது:-

1,046 வாக்குச்சாவடிகள்

தேர்தல் பணிக்கு தயார்படுத்தப்பட்ட வாகனங்கள் மூலம் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்குப்பெட்டி, தேர்தல் பொருட்களை எடுத்து செல்ல வாகனத்திற்கு ஒரு தேர்தல் அலுவலர், போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து சென்றனர். அந்த வாகனங்களில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பெட்டியை, அந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு, கையெழுத்து பெறப்படும்.

மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் 1,046 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 23 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 456 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளில் தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் பாதுகாப்பாக வாக்குப்பெட்டிகளை, வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு எடுத்து வரப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பும், வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பாதுகாப்பு பணியில் 2,709 பேர்

2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவில் சூளகிரி, கெலமங்கலம் ஒன்றியங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2,709 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...