தென்காசி,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, அவற்றின் நகல்களை கிழித்து, அனைத்து தொழிற்சங்கத்தினர் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர் வன்னிய பெருமாள், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் அயூப்கான், வட்டார செயலாளர் கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் கணேசன், முருகையா, பீடி தொழிலாளர் சங்கம் வள்ளிநாயகம், கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.