மாவட்ட செய்திகள்

5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரன், சி.ஐ.டி.யு. நிர்வாகி யோகராஜ் மற்றும் டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் திருநாவுக்கரசு, நந்தகோபால், வெங்கடேசன், வசந்த், விஸ்வநாதன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திரளான டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டு டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு சுழற்சிமுறையில் பணியிடமாறுதல் கொள்கையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் ஆணையை ரத்துசெய்ய வேண்டும், கொரோனா பரவல் தடுப்பு ஏற்பாட்டு செலவினத்தை முழுவதுமாக வழங்க வேண்டும், சென்னை ஐகோர்ட்டு உத்தரவை மேல்முறையீடு செய்யாமலும், சட்டத்திருத்தம் செய்யாமலும் மது கூடங்களை மூட வேண்டும், டாஸ்மாக் கடை நிர்வாகத்தில் தலையிடும் மது கூடத்தின் உரிமைதாரர்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்ற கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை