மாவட்ட செய்திகள்

கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்: பா.ம.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும் செஞ்சியில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி, மயிலம் ஆகிய சட்டமன்ற தொகுதி பா.ம.க. ஆலோசனை கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது.

செஞ்சி,

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி, மயிலம் ஆகிய சட்டமன்ற தொகுதி பா.ம.க. ஆலோசனை கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் கனல் பெருமாள் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். தலைமை அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் பேராசிரியர் தீரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

இதில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன்பு வருகிற 14-ந்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்வது, 23-ந்தேதி பேரூராட்சி அலுவலகம் முன்பும், 30-ந்தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், மாநில துணை அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், மாநில தேர்தல் பணிக்குழு துணை செயலாளர் சேட்டு, முன்னாள் சேர்மன் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் அய்யனார், மாவட்ட அமைப்பு செயலாளர் கோபால், வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சரவணன் மற்றும் குப்புசாமி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...