5 நாட்கள் தடை
கொரோனா பரவல் காரணமாக பொங்கல் பண்டிகையையொட்டி பக்தர்கள் அதிக அளவில் கூடிவிடக்கூடாது என்பதற்காக 5 நாட்கள் கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
தைப்பூச நாளான்றும் முருகன் கோவில்களில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
3 மணி நேரம் காத்திருந்து...
நேற்று குடியரசு தினத்தையொட்டி விடுமுறை என்பதால் திருத்தணி முருகன் கோவிலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மற்றும் ஆந்திரா, கர்நாடகா என அண்டை மாநிலங்களில் இருந்து பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக எப்போதும் இல்லாத அளவில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதே போல் ரூ.100 மற்றும் ரூ.150 சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.