மாவட்ட செய்திகள்

ரோந்து பணி சென்ற போது தகராறு: போலீஸ் ஏட்டை தாக்கிய பெயிண்டர் கைது

ரோந்து பணி சென்ற போது போலீஸ் ஏட்டை தாக்கிய பெயிண்டரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினத்தந்தி

சென்னை கீழ்ப்பாக்கம், டி.பி.சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சண்முகம் (வயது 47). போலீஸ் ஏட்டாக பணிபுரியும் இவர், திரு.வி.க.நகர் போலீஸ் நிலையத்தில் ரோந்து வாகனம் ஓட்டி வருகிறார். இதற்கிடையே இவர், கடந்த 31-ந் தேதி நள்ளிரவு எஸ்.ஆர்.பி. கோவில் தெருவில் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்துடன் ரோந்து வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெயிண்டரான ஜெயசூர்யா (24) என்பவர் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்வதை கண்டு சண்முகம் தட்டி கேட்டுள்ளார்.

இதில், போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்த ஜெயசூர்யா திடீரென ஏட்டு சண்முகம் சட்டையை கிழித்து அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து சண்முகம் கொடுத்த புகாரின் பேரில், திரு.வி.க.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயசூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை