மாவட்ட செய்திகள்

தண்டுபத்தில் தி.மு.க. வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் கூட்டம் - அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

தண்டுபத்தில் தி.மு.க. வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

உடன்குடி,

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் கூட்டம் உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் நடந்தது. மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமை தாங்கினர். மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேர்தலில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து பேசினார்.

கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக்க தீவிரமாக பாடு பட வேண்டும். மக்கள் சபை கூட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் மீது பொய் வழக்கு போட்ட தமிழக அரசை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பாடு படவேண்டும். விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பது, ஆன்லைன் மூலம் தி.மு.க. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் சாத்ராக், ஜனார்த்தனம், ரகுபத்மநாபன், பூங்குமார் சங்கர், மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், வக்கீல் மனோஜ் நன்றி கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...