மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் வேலைநிறுத்தம்; புறநோயாளிகள் பிரிவு செயல்படாததால் பொதுமக்கள் அவதி

மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை களில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகள் பிரிவு செயல்படாததால் பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டனர்.

தினத்தந்தி

விக்கிரவாண்டி,

தமிழ்நாடு அரசு டாக்டர்களுக்கு காலம் சார்ந்த ஊதிய உயர்வை அவர்கள் பணியில் சேர்ந்த 13-ம் வருடத்தில் இருந்து வழங்க வேண்டும், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி அல்லாமல் நோயாளிகள் எண்ணிக்கை அடிப்படையில் மருத்துவ பணியிடங்களை உருவாக்கி மருத்துவர்களை நியமிக்க வேண்டும், அதற்கு எதிராக உள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும், முதுநிலை மருத்துவ படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் மட்டுமே பணியிடங்களை ஒதுக்க வேண்டும், அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்புகளிலும், உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளிலும் ஏற்கனவே அமலில் இருந்து வந்த 50 சதவீத இடஒதுக்கீடு ரத்தாகி உள்ளதை உடனடியாக மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், உதவி மருத்துவ அலுவலர்கள் என சுமார் 500 பேர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. இதனால் சாதாரண காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை பெற வந்த பொதுமக்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் அவர்கள் தனியார் மருத்துவமனையை நாடிச்சென்றனர். அதேநேரத்தில் அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் அவசர சிகிச்சை பிரிவு வழக்கம்போல் செயல்பட்டது. அதில் ஒன்றிரண்டு டாக்டர்கள் பணியில் இருந்து அவசர சிகிச்சையளித்தனர். விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் டாக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்சுந்தர் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் மற்றும் உதவி மருத்துவ அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை