மாவட்ட செய்திகள்

அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

நாமக்கல்,

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக தமிழக அரசு டாக்டர்களுக்கும் ஊதியம் மற்றும் பணப்படிகளை வழங்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த கூட்டமைப்பு சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று புறநோயாளிகள் பகுதி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் புறநோயாளிகள் பகுதியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்த அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை