மாவட்ட செய்திகள்

வயல்களில் தேங்கிய நீரை வெளியேற்ற வடிகால்கள் அமைக்க வேண்டும் - விவசாயிகளுக்கு, மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

வயல்களில் தேங்கிய நீரை வெளியேற்ற வடிகால்கள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு, மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.,

திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சொர்ணவாரி பருவத்தில் 23 ஆயிரத்து 234 ஹெக்டர் நெல் நடவு செய்யப்பட்டு 80 சதவீதம் பயிர்கள் அறுவடை முடிந்துள்ளது. 20 சதவிகிதம் பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் 5 ஆயிரம் ஹெக்டர் நெல் சம்பா பருவத்தில் நடவு செய்யப்பட்டுள்ளது.

இதில் சில வட்டாரங்களில் தாழ்வான பகுதிகளிலும் விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். தற்போது தென்மேற்கு பருவமழை முடிவடையும் தருவாயில், வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இயல்பான மழையை விட அதிகமான மழை பெய்து உள்ளது.

எனவே தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் நெல் வயல்களில் வடிகால் வசதி செய்து தேங்கிய நீரை வெளியேற்றவும் முதிர்ச்சி அடைந்த நெற்பயிர்களை சரியான நேரத்தில் அறுவடை செய்யவும் விவசாயிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...