மாவட்ட செய்திகள்

கல்வி துறை அதிகாரியை தாக்கி கொலை மிரட்டல் தம்பதி உள்பட 5 பேர் மீது வழக்கு

கல்வி துறை அதிகாரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் சிவலிங்கபுரம் காந்தி வீதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 53). இவர் புதுவை அரசின் கல்வித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய வீட்டுக்கு எதிர் வீட்டைச் சேர்ந்தவர் குமார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குமாரின் வீட்டுக்கு அடிக்கடி சில வாலிபர்கள் வந்து பேசி செல்வதும், பல சமயங்களில் அவர்கள் ரகளையிலும் ஈடுபட்டு வந்தனர்.

அதனை அதிகாரி மோகன் தட்டிக்கேட்டார். அதன் காரணமாக குமார் மற்றும் மோகன் இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த குமார், அவருடைய மனைவி கிரிஜா, மகன்கள் அரவிந்தன், அருள் மற்றும் ராகுல் ஆகிய 5 பேரும் சேர்ந்து மோகனை தாக்கியதாகவும், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் மோகன் புகார் செய்தார். ஆனால் போலீசார் புகாரை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. அதனால் மோகன் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். அதன் மீது நீதிபதி விசாரணை நடத்தி, கல்வி துறை அதிகாரி மோகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து குமார், அவருடைய மனைவி கிரிஜா, மகன்கள் அரவிந்தன், அருள் மற்றும் ராகுல் ஆகிய 5 பேர் மீதும் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...