மாவட்ட செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 500 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். இதனால் முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

கறிக்கோழி விலை கிலோ ரூ.82 ஆகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.80 ஆகவும் இருந்து வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.