மாவட்ட செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய பயிர்களை நாசம் செய்த யானைகள்

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய பயிர்களை யானைகள் நாசம் செய்தன.

தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை தாலுகா அய்யூர் காப்புக்காட்டில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானை கூட்டத்தில் இருந்து ஒரு கும்பல் நேற்று தேன்கனிக்கோட்டை அருகே உள்ள எஸ்.குருபட்டி கிராமத்திற்குள் சென்றன. அங்கு விவசாய நிலத்திற்குள் சென்ற யானைகள், அந்த பகுதியை சேர்ந்த அனந்தன் என்பவரின் தோட்டத்தில் பயிரிட்டிருந்த ஒரு ஏக்கர் தக்காளி, பீன்ஸ், ராகி போன்ற பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்தன.

மேலும் அதே கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் தோட்டத்தில் ஒரு ஏக்கர் தக்காளி பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. மேலும் சீனிவாசன் என்பவரின் தோட்டத்தில் ஒரு ஏக்கர் தக்காளி பயிர்களை யானைகள் நாசப்படுத்தின.

வனத்துறையினர் பார்வையிட்டனர்

இந்தநிலையில் நேற்று காலையில் தங்களின் விவசாய நிலங்களுக்கு சென்ற விவசாயிகள் பயிர்களை யானைகள் நாசம் செய்து இருந்ததை கண்டு கண்ணீர் விட்டு அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார், வன காப்பாளர் ஆறுமுகம் மற்றும் வனத்துறையினர் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர். மேலும் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்