மாவட்ட செய்திகள்

கொரோனா பரிசோதனை உபகரணங்கள் சாலையில் கொட்டப்பட்டதால் பரபரப்பு

கொரோனா பரிசோதனை உபகரணங்கள் சாலையில் கொட்டப்பட்டதால் பரபரப்பு

கோவை

கோவை மாநகரில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் அதிகரித்தது. எனவே கொரோனா பரிசோதனை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோவை செல்வபுரம் 78 -வது வார்டு ஆலமரம் பஸ் நிறுத்தம் அருகே நாடார் வீதியில் ஒரு சாக்குப்பை கிடந்தது. அதில், கொரோனா சளி மாதிரி பரிசோதனைக்கு பயன்படுத்தப்ப டும் புதிய ஊசிகள் இருந்தன.

இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அதிகாரிகள் விரைந்து சென்று அந்த சாக்குப்பையை பிரித்து பார்த்தனர்.

அதில் பயன்படுத்தப்படாத சளி மாதிரி பரிசோதனை செய்யும் ஊசிகள் இருந்தது உறுதியானது. அதில், 300-க்கும் மேற்பட்ட ஊசிகள் இருந்தன. அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் கைப்பற்றினர்.

கொரோனா பரிசோதனை உபகரணங்களை சாக்குப்பையில் கட்டி வீசியவர்கள் யார் என்பது குறுத்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பயன்படுத்தப்படாத கொரோனா உபகரணங்கள் பொது இடத்தில் வீசப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...