கீரனூர்,
கீரனூரை அடுத்த வீரப்பட்டியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 26). இவர் கரூரை சேர்ந்த மோகன் பாபுவை (28) கனடா நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.3 லட்சத்தை பெற்றுக்கொண்டு போலி விசா கொடுத்து ஏமாற்றியுள்ளார். பின்னர் பேச்சுவார்த்தையில் ரூ.30 ஆயிரத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் மோகன்பாபு கொடுத்த புகாரின் பேரில் பிரசாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.