மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான விவசாயிகள் பங்கு பங்கு பெற்றனர்.

அப்போது விவசாயிகள் கலெக்டரிடம் விவசாய நிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் கால்நடைகளை ஒழுங்குபடுத்துதல், ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், இறால் பண்ணைகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குனர் சம்பத்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசர், துணை இயக்குனர் பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்