மாவட்ட செய்திகள்

மீனவர் தற்கொலை

உவரி அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திசையன்விளை,

உவரி அருகே கூடுதாழையைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் கிசன் (வயது 38). மீனவர். இவருடைய மனைவி சால்வா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கிசன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று அதிகாலையில் தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில், உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.