மாவட்ட செய்திகள்

போலீசாரின் மென்மையான அணுகுமுறை: பயமின்றி சாலைகளில் வலம் வந்த மக்கள்

போலீசாரின் மென்மையான அணுகுமுறையால் பயமின்றி சாலைகளில் மக்கள் வலம் வந்தனர்.

தஞ்சாவூர்,

கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால் தமிழகஅரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள், இறைச்சிக்கடைகள், டீக்கடைகள், பழக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் கடைகள் திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் 10 மணி வரை என குறைக்கப்பட்டது. மேலும் டீக்கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் திறக்க அனுமதிப்படவில்லை. காலை 10 மணிக்கு பிறகு பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ஓட்டல்கள், பால் விற்பனை கடைகள் மட்டுமே திறந்து இருக்கின்றன. பிற கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டுள்ளதால் தஞ்சை மாநகரில் காலை 10 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

மென்மையான அணுகுமுறை

ஆனால் அதன்பிறகும் மக்கள் இருசக்கர வாகனங்கள், கார்களில் சாலைகளில் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். முழு ஊரடங்கை மீறி வருபவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அவர்களும் மக்களிடம் மென்மையான அணுகுமுறையையே கையாண்டனர்.

தஞ்சை அண்ணாசிலை அருகே இருசக்கர வாகனங்கள், கார்களில் வந்தவர்களை எல்லாம் வழிமறித்த போலீசார், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் உயிர்பலியும் அதிகரித்து வருகிறது. இதனால் உங்களது மனைவி, குழந்தைகளை மனதில் கொண்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுரை வழங்கினர்.

பயமின்றி வலம் வந்த மக்கள்

அத்தியாவசிய தேவையின்றி வந்த சிலருக்கு மட்டும் ரூ.200 அபராதம் விதித்தனர். தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே போலீசார், தேவையின்றி வாகனங்களில் வந்தவர்களுக்கு அபராதம் விதித்ததுடன் இனிமேல் தேவையின்றி வெளியே வரமாட்டேன் என உறுதிமொழி ஏற்க வைத்தனர்.இப்படி போலீசார் அறிவுரை கூறினாலும், அபராதம் விதித்தாலும் தஞ்சை காந்திஜிசாலை, மருத்துவக்கல்லூரி சாலை, அண்ணாசாலை, ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை உள்பட சாலைகளில் மக்கள் பயமின்றி வழக்கம்போல் வலம் வந்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...