பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாகமரை ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 39). பென்னாகரத்தில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.