சென்னை,
விழாவில் டாக்டர்கள், மருத்துவ, செவிலியர், கல்லூரி மாணவ, மாணவிகள் குடை பிடித்து ஊர்வலமாக சென்றும், வில்லுப்பாட்டு இசைத்தும், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி பேசியதாவது:
உலக சுகாதார நிறுவனம் கடந்த 70 ஆண்டுகளாக சுகாதார நாளை கொண்டாடுகிறது. கடந்த 2015ம் ஆண்டு உலக தலைவர்கள் கூடி, 2030ம் ஆண்டில் அனைவருக்கும் சுகாதாரம் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளனர். இந்த இலக்கின்படி கஷ்டப்பட்டவர்களுக்கு சிறந்த மருத்துவம் அளிப்பது நமது கடமையாகும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி, பொது சுகாதார கூடுதல் இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.