வெங்கமேடு பகுதியில் தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி வாக்கு சேகரித்த போது 
மாவட்ட செய்திகள்

கரூர்-வெங்கமேட்டில் அரசு மருத்துவமனை அமைக்கப்படும்; கரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி வாக்குறுதி

கரூர் வடக்கு நகரத்திற்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்படும் என வி.செந்தில் பாலாஜி வாக்குறுதி அளித்தார்.

வாக்கு சேகரிப்பு

கரூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி கரூர் தெற்கு நகரத்திற்கு உட்பட்ட 38-வது வார்டு மற்றும் வடக்கு நகரத்திற்கு உட்பட்ட 4, 7 வார்டு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

அரசு மருத்துவமனை

அப்போது அவர் கூறுகையில், கரூர் வடக்கு நகரம் வெங்கமேடு பகுதியில் நெசவுத் தொழிலாளர்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். மேலும் அந்தப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். வெங்கமேடு ரயில்வே மேம்பாலம் முதல் அரசு காலனி வரை புறவழிச்சாலை அமைக்கப்படும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டியில்லா கடன் மற்றும் அவர்கள் முன்னேற்றத்திற்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்படும். கைம்பெண்களுக்கு அரசு வேலை வாய்ப்பு ஏற்படுத்த சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்கள் அவரது குடும்பத்தார் நலனில் கவனம் செலுத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு ஆசிரிய பெருமக்களுக்கு பரிசளித்து கவுரவிக்கப்படுவர். ஆகவே, உங்களில் ஒருவனாக என்னை நினைத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...