மாவட்ட செய்திகள்

திருப்பூரில் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு; சமையல் தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்

திருப்பூரில் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சமையல் தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

வீரபாண்டி,

திருப்பூர்-காங்கேயம் ரோடு பகுதியை சேர்ந்த 11 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த மாணவியை அவருடைய தந்தை தினமும் பள்ளியில் கொண்டு விடுவார். இந்த நிலையில் அந்த மாணவியை அவருடைய தந்தை நேற்று வழக்கம் போல் பள்ளியில் கொண்டு விட சென்றார்.

அப்போது அந்த மாணவி மிகவும் சோர்வாக இருந்துள்ளார். இது குறித்து அவருடைய தந்தை விசாரித்தபோது, அந்த மாணவி கூறிய தகவல்கள் அவரை அதிர்ச்சியடைய வைத்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளியான வேலாயுதம் (வயது 52) என்பவர், கடந்த 15 நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வேலாயுதம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை தெரிந்து கொண்ட வேலாயுதம் தலைமறைவானார். இதையடுத்து தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

5-ம் வகுப்பு மாணவியை சமையல் தொழிலாளி ஒருவர் கடந்த 15 நாட்களாக பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை