மாவட்ட செய்திகள்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 180 மனுக்கள் குவிந்தன

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 180 மனுக்கள் வரப்பெற்றன.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அவரிடம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கி கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களை வழங்கினர்.

கூட்டத்தில் 180 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான உத்தரவு ஆணையை கலெக்டர் வழங்கினார்.

முன்னதாக மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாமை கலெக்டர் ராமன் பார்வையிட்டார். தொடர்ந்து கலெக்டர் அலுவலக கீழ்தளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் ராமன் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், தனித்துணை கலெக்டர் சுகந்தி பரிமளம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் தியாகராஜன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...