மாவட்ட செய்திகள்

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், மணல் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

மணல் குவாரிகளில் மணல் ஏற்றி விட தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள லோடிங் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், மணல் குவாரிகள் இயங்கும்

சென்னை,

மணல் குவாரிகளில் மணல் ஏற்றி விட தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள லோடிங் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், மணல் குவாரிகள் இயங்கும் இடங்களுக்கு வெளியே மணல் சேமிப்பு கிடங்கு அமைத்து ரொக்கமில்லா பண பரிமாற்றத்துக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும், அனுமதிக்கப்பட்ட அளவு லோடு மணல் லாரியில் ஏற்றிவிடவேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல.இராசாமணி தலைமை தாங்கினார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.