மாவட்ட செய்திகள்

வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

விளாத்திகுளம்,

வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

வாலிபர்

விளாத்திகுளம் அருகே உள்ள க.சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பாபுராஜ். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சுப்புதாய். இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள். இவர்களின் 2வது மகன் முனியசாமி (வயது 18). இவர் 10ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு கட்டிட வேலைக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களாக முனியசாமிக்கு சரியாக வேலை அமையவில்லை என்று கூறப்படுகிறது. அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு முனியசாமி வெளியே சென்றார். அதன் பின்னர் பாபுராஜ், சுப்புதாய் ஆகியோரும் கூலி வேலைக்கு சென்றனர்.

தற்கொலை

மதியம் வேலைக்கு சென்றுவிட்டு சுப்புதாய் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது முனியசாமி, வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதை பார்த்து சுப்புதாய் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்

உடன்குடி அருகே உள்ள காதரகோன்விளை வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 45) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு 7 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 10 மாதங்களாக தேவி, ஜெயபாலை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஜெயபால் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்