காட்பாடி,
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- காட்பாடி காந்திநகர் சித்தூர் மெயின் ரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்துக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு வாலிபர் வந்தார். அவர் மதுபோதையில் தள்ளாடியபடி கையில் இருந்த காலி மதுபாட்டிலை வைத்துக் கொண்டு ரகளை செய்தார். அந்த வாலிபர் அட்டகாசத்தில் ஈடுபட்டது ஏ.டி.எம். மையத்தின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.