மாவட்ட செய்திகள்

தியாகதுருகத்தில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்

தியாகதுருகத்தில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்

கண்டாச்சிமங்கலம்

முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பூங்கொடி, திட்ட இயக்குனர் மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர் என சுமார் 62 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார், மருத்துவர்கள் சபரிநாதன், ராஜலட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.