மாவட்ட செய்திகள்

பாளையங்கோட்டையில் மீன் வியாபாரி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து வாலிபர் கைது

பாளையங்கோட்டையில் மீன் வியாபாரி உள்பட 2 பேரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

பாளையங்கோட்டை அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ். இதே பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர்கள் 2 பேரும் மீன்வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு இடையே தொழில் போட்டியால் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சங்கரின் மகன் சின்னச்சாமி (வயது 27) மீன்கடைக்கு வந்தார். அவர் ஜெகதீசை மீன்வெட்டும் கத்தியால் சரமாரியாக குத்தினார். மேலும் ஜெகதீசுக்கு சொந்தமான லோடு ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்து நொறுக்கினார். அப்போது மீன் வாங்க வந்திருந்த தியாகராஜநகரை சேர்ந்த குமார் என்பவர் இதனை தடுக்க முயன்றார். அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

இதையடுத்து, காயம் அடைந்த ஜெகதீஷ், குமார் ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜென்சி வழக்குப்பதிவு செய்து சின்னச்சாமியை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...