மாவட்ட செய்திகள்

தொழிற்சாலை உணவகத்தில் சாப்பிட்ட 14 பேருக்கு வாந்தி, மயக்கம்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த ஒரகடம் சிப்காட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

படப்பை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பணிக்கு வந்த தொழிலாளர்கள் உணவு நேரமான இரவு 8 மணிக்கு தொழிற்சாலையில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டனர். அப்போது தொழிலாளி ஒருவரின் சாப்பாட்டில் ஊற்றப்பட்ட சாம்பாரில் பல்லியின் கால் கிடப்பதை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து உணவகம் நடத்துபவரிடம் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் உணவகத்தில் சாப்பிட்ட 14 தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதனை அறிந்த தொழிற்சாலை நிர்வாகம் மயக்கம் அடைந்த 14 பேரையும் மீட்டு தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தது. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று காலை அனைவரும் வீட்டுக்கு சென்றனர். இது குறித்து ஒரகடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தினார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...