மாவட்ட செய்திகள்

சிறுவன் கொலை வழக்கில் 2 பேர் கைது

சிறுவன் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த சிட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் நவீன்குமார் (வயது 15). இவர் காஞ்சீபுரம் உப்பேரி குளத்தில் தலை, கால் போன்ற இடங்களில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் தீவிர விசாரணை நடத்தி வந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கொலை செய்யப்பட்ட நவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் போலீசார் சந்தேகத்தின் பேரில், 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் காஞ்சீபுரம் ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் காஞ்சீபுரம் திருப்புகூடல் தெருவை சேர்ந்த ராமு என்கிற ராமசாமி (20) ஆகியோர் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் நவீன்குமாரை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...