மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டனர்

தினத்தந்தி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, மதுபாட்டில்கள், புகையிலைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 5 வழக்குகளும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 1 வழக்கும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 2 வழக்குகளும், மணியாச்சி உட்கோட்டத்தில் 4 வழக்குகளும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 3 வழக்குகளும், விளாத்திக்குளம் உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 1 வழக்கும், மதுவிலக்கு போலீஸ் நிலையங்களில் 5 வழக்குகளும் ஆக மொத்தம் 26 வழக்குகள் பதிவு செய்து 26 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கஞ்சா

இதில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வழக்குகளில் 3 பேரும், மதுபாட்டில்கள் விற்பனை செய்த 15 பேரும், புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த 8 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 220 கிராம் கஞ்சா, 115 மதுபாட்டில்கள் மற்றும் 1512 புகையிலைப் பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை