திருவாரூர்,
நாகை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தாழை.சரவணன், தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளராக செல்வராசு, அ.ம.மு.க. சார்பில் செங்கொடி, மக்கள் நீதி மய்யம் சார்பில் குருவையா, நாம் தமிழர் கட்சி சார்பில் மாலதி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அனிதா மற்றும் சுயேச்சைகள் உள்பட 15 பேர் போட்டியிட்டனர்.
இவர்களில் அ.தி.மு.க. வேட்பாளர் தாழை.சரவணன், இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் செல்வராசு இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் செல்வராசு வெற்றி பெற்றார்.
எண்ணிக்கை
நாகை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை திருவாரூர் அருகே உள்ள கிடாரங்கொண்டான் திரு.வி.க. கல்லூரியில் நடந்தது. நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை தனித்தனி அறைகளில் நடந்தது.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களின் அறை சீல் பிரிக்கப்பட்டு ஓட்டுகள் எண்ணப்பட்டன.
இந்திய கம்யூனிஸ்டு வெற்றி
21 சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் செல்வராசு அ.தி.மு.க. வேட்பாளர் தாழை.சரவணனை விட 2,01,936 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு, அ.தி.மு.க. அ.ம. மு.க., மக்கள் நீதி மய்யம், நாம்தமிழர், பகுஜன்சமாஜ் மற்றும் சுயேச்சைகள் 21 சுற்றுகள் முடிவில் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:--
மொத்த வாக்குகள் - 13,03,060
பதிவானவை - 9,95,947.
1. செல்வராசு(இந்திய கம்யூனிஸ்டு) - 5,00,186
2. தாழை.ம.சரவணன் (அ.தி.மு.க.) - 2,98250
3.செங்கொடி(அ.ம.மு.க.) - 67,639
4.மாலதி(நாம் தமிழர்) - 49,504
5.குருவையா(மக்கள் நீதி மய்யம்) - 13,952
6.அனிதா(பகுஜன்சமாஜ்) - 5,538
7.பிரேம்(சுயே) - 3,019
8.அம்பிகாபதி(சுயே) -2,802
9.ஜெகதீஷ்(சுயே) - 2,306
10.சம்பத்குமார்(சுயே) - 2,010
11.சம்பத்(சுயே) - 1,697
12.சிவகுமார்(சுயே) - 1,222
13. ஜெயலட்சுமி(சுயே) - 1,136
14.சவுந்தர்ராஜன்(சுயே) - 1,052
15.வேதரத்தினம் - 861
நோட்டா - 9,082.
நாகை நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதிமய்யம், பகுஜன் சமாஜ் உள்பட 13 பேர் டெபாசிட் இழந்தனர்.
நாகை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் செல்வராசுவுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெற்றி சான்றிதழை வழங்கினார்.