மாவட்ட செய்திகள்

துறையூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

இந்திரா காந்தி துறையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இந்திரா காந்தி துறையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் கிராமங்களில் பிரசாரத்தின் போது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்திருந்த தேர்தல் வாக்குறுதிகளையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது மக்களுக்கு செய்த பணிகளையும் கூறி தேர்தல் பிரசாரம் செய்தார். தொடர்ந்து ம.தி.மு.க., தேவேந்திரகுல நல சங்கத்தை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில் ம.தி.மு.க. துறையூர் கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த 15 கிளை நிர்வாகிகளும், தேவேந்திரகுல நல சங்கத்தை சேர்ந்த 40 உறுப்பினர்களும் துறையூர் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி முன்னிலையில் துறையூர் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்திக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சி முடிந்த பின்பு துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள கிராமங்களில் தீவிர பிரசாரம் செய்து ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் நமது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஏழை-எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கிலும், திட்டங்கள் அனைத்தும் முழுமையாக உங்களுக்கு வந்து அடைய உங்களில் ஒருவராக பணிபுரிய காத்திருக்கிறேன். இதற்காக இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி அடைய செய்யுங்கள் என்றார்.

இதில் உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் அழகாபுரி செல்வராஜ், ராம்மோகன், துறையூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சேனை செல்வம், தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பொன் காமராஜ், பேரூராட்சி கழக செயலாளர் ராஜேந்திரன், உப்பிலியபுரம் நகர செயலாளர் ராஜாங்கம், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.