மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்ட 4 பேர் கைது

ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டுள்ளனர். அப்போது காளைகள் முட்டியதில் இளங்கோ (வயது 21), கோகுலகிருஷ்ணன் (12) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஜல்லிக்கட்டு காளைகளை அனுமதி இன்றி அவிழ்த்துவிட்ட தொண்டமாந்துறையை சேர்ந்த விஜய் (வயது 22), சங்கர் (23), முகமது ரியாஸ் (21), அருண்குமார் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.