மாவட்ட செய்திகள்

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஊர்வலம்

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 69–வது பிறந்த நாள் விழா கொண் டாடப்பட்டது.

கரூர்,

இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. கு.வடிவேல் தலைமை தாங்கி னார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காமராஜ், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து கரூர் வெங்கமேடு காமராஜர் சிலையில் இருந்து ஊர்வலம் சென்று அங்குள்ள எம்.ஜி.ஆர்., அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் வெங்கமேட்டில் இருந்து மீண்டும் ஊர்வலமாக புறப்பட்டு சர்ச் கார்னர், ஜவகர் பஜார் வழியாக வந்து கரூர் பஸ் நிலைய ரவுண்டானா வந்தடைந்தனர். பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.