மாவட்ட செய்திகள்

மாவட்ட மைய நூலகத்தில் கருவேல மரங்களை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

அனைத்து அரசு அலுவலகங்களிலும் கருவேல மரம் அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நெல்லை,

மாவட்ட கலெக்டர் கருணாகரன் உத்தரவுப்படி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் நேற்று காலை கருவேல மரம் அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அதன்படி மாவட்ட மைய நூலகத்திலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் மந்திரம் தலைமை தாங்கி, பேசினார்.

மாவட்ட மைய நூலகர் முத்துக்கிருஷ்ணன், வயலட், சீனிவாசன், அலுவலக கண்காணிப்பாளர் சங்கரன், முத்துலட்சுமி, பிரியதர்ஷினி, அப்பாதுரை, சங்கர், கோலப்பன், முத்துக்குமாரி, சந்திரன், விஜி மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர்.