மாவட்ட செய்திகள்

சமயபுரம் அருகே வெவ்வேறு விபத்துகளில் செவிலியர் உள்பட 2 பேர் பலி

சமயபுரம் அருகே வெவ்வேறு விபத்துகளில் செவிலியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

சமயபுரம், மே.18-
சமயபுரம் அருகே வெவ்வேறு விபத்துகளில் செவிலியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
கார் மோதி பலி
சமயபுரம் அருகே இருங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தண்ணீர் தேக்கசாலையை சேர்ந்த பாலமுருகன் (வயது 51) என்பவரை கைது செய்தனர்.
செவிலியர் பலி
சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி வனிதா (32) இருங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். நேற்று வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே வனிதா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும், அதை ஓட்டி வந்தவரையும் தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...