மாவட்ட செய்திகள்

குரங்கணி காட்டுத்தீ விபத்து: சாவு எண்ணிக்கை 22 ஆக உயர்வு

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

மதுரை,

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த மாதம் 11-ந் தேதி தீப்பிடித்தது.

இந்த விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிகொண்டனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 9 பேர் சடலமாக மறுநாள் மீட்கப்பட்டனர்.

தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மதுரை, சென்னை, கோவை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர் களில் 12 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

இந்த நிலையில் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த முருகபூபதி மகள் சிவசங்கரி(வயது 25) என்பவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இதைத் தொடர்ந்து குரங்கணி தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

22 பேர் இறந்த நிலையில், கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த மீனா ஜார்ஜ் என்பவருக்கு மதுரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...