மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு தீ வைத்து விட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தானேயில் வீட்டிற்கு தீ வைத்துவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

தானே,

தானே மாவட்டம் கல்வா, காரேகாவ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அஜிங்கே(வயது21). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் புனேயில் உள்ள ஒரு கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு படித்தார். எனினும் அந்த படிப்பில் இவர் தேர்ச்சி பெறவில்லை. இவர் நேற்று முன்தினம் காலை வீட்டில் தனியாக இருந்தார். இவரது பெற்றோர் உரன் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

இந்தநிலையில் திடீரென அஜிங்கேயின் வீட்டில் இருந்து புகை வந்தது. உடனடியாக பக்கத்து வீட்டினர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது வீட்டின் சமையல் அறையில் அஜிங்கே தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். மேலும் அந்த அறை எரிந்து கொண்டு இருந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் தூக்கில் தொங்கி கொண்டு இருந்த அஜிங்கேயை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அஜிங்கேயை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், படிப்பை பாதியில் விட்ட விரக்தியில் அஜிங்கேவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டு, சம்பவத்தன்று அவர் யாரும் இல்லாதபோது வீட்டிற்கு தீ வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை