மாமல்லபுரம்,
மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியில் பொதுப்பணித்துறை சாலையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது. கருக்காத்தம்மன் கோவிலில் இருந்து 108 பக்தர்கள் பால்குடங்களை சுமந்து காளிகாம்பாள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது.
திருவள்ளூர் பெரும்பாக்கத்தில் உள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி 108 பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தபடி திருவள்ளூர் வேம்புலியம்மன் கோவிலில் இருந்து கருமாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் கருமாரியம்மனுக்கு தாங்களே பால் அபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர்.