மாவட்ட செய்திகள்

மின்கசிவால் அ.தி.மு.க. பிரமுகரின் வீடு தீப்பிடித்து எரிந்தது ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

திருத்துறைப்பூண்டியில் மின்கசிவால் அ.தி.மு.க. பிரமுகர் வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தேனிக்குளம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் குணாளன் (வயது 60). அ.தி.மு.க. பிரமுகர். இவருக்கு சொந்தமான மாடி வீட்டின் பின்புறத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டுமான பணிகள் நடக்கிறது. இதனால் இவர் வேதை ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தேனிக் குளம் பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள குணாளன் வீட்டில் நேற்றுமுன்தினம் இரவு மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ வீடு முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த டி.வி., தையல் எந்திரம், ஜன்னல் உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தது. தீவிபத்தில் சேதமான பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...