ஆவூர்:
விராலிமலை ஒன்றியம், லெட்சுமணன்பட்டியை சேர்ந்தவர் பாலுக்கண்ணு. விவசாயி. இவரது மனைவி அமுதா (வயது 47). இவர்களது மகன் தினேஷ்குமார் (25). இந்நிலையில் தினேஷ்குமார் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மகன் மீது வெறுப்பு ஏற்பட்டு விரக்தி அடைந்த அமுதா கடந்த 5-ந் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அவரது உறவினர்கள் அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அமுதா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.