பெரம்பலூர்:
பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசி கொன்று குவித்து வருகிறது. மேலும் இஸ்ரேல் ராணுவம் ரமலான் மாதத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது அத்துமீறி நடத்திய தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் லெப்பைக்குடிக்காடு கிளை மற்றும் வி.களத்தூர் கிளை சார்பில் இணையவழி போராட்டம் 2 இடங்களிலும் நேற்று நடந்தது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு காரணமாக, திரளான முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலை கண்டித்தும் வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி இணையவழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.