மாவட்ட செய்திகள்

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முக்குலத்து புலிகள் அமைப்பை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

மன்னார்குடி,

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வேண்டும். முக்குலத்தோரை தேவர் என வகைப்படுத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் பசும்பொன் தேவர் படம் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி பெரியார் சிலை சந்திப்பு அருகில் முக்குலத்து புலிகள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மன்னார்குடி ஒன்றிய தலைவர் தனியரசன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ், திருவாரூர் மாவட்ட அவைத்தலைவர் பிரபு, கோட்டூர் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணி, கோட்டூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் பழனி, மன்னார்குடி நகர இளைஞரணி செயலாளர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முக்குலத்துபுலிகள் அமைப்பை சேர்ந்த 30 பேரை கைது செய்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...