மாவட்ட செய்திகள்

நம்பியூர் பஸ் நிலையத்தில் ரவுண்டானா அமைக்கும் பணியை அமைச்சர் ஆய்வு, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

நம்பியூர் பஸ் நிலையத்தில் ரவுண்டானா அமைக்கும் பணியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார். அப்போது அவர் அதிகாரிகளிடம் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நம்பியூர்,

நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நம்பியூர் பஸ் நிலையம் ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. மேலும் பஸ் நிலையம் எதிரே ரவுண்டானா அமைக்கும் பணியும் ரூ.1 கோடி செலவில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இங்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திடீரென வந்தார்.

பின்னர் பணியை ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது கருப்பண கவுண்டர், சேரன் சரவணன், செல்வம், அரசு வக்கீல் கங்காதரன், நம்பியூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் தம்பி என்கிற சுப்ரமணியம், நம்பியூர் பேரூராட்சி செயல் அதிகாரி கணேசன், நம்பியூர் தாசில்தார் உமாமகேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்