மாவட்ட செய்திகள்

நாங்குநேரி இடைத்தேர்தல் பணிக்கு வந்த போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை

நாங்குநேரி இடைத்தேர்தல் பணிக்கு வந்த போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி,

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே கூழையனூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் கங்காதரன் (வயது 32). இவர் அங்குள்ள தென்கரை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். நேற்று மாலையில் தேனியில் இருந்து சுமார் 50 போலீசார், நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக போலீஸ் பஸ்சில் புறப்பட்டு வந்தனர். அந்த பஸ்சில் கங்காதரனும் வந்தார். இரவு 7 மணியளவில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை கடந்து வந்தபோது, கங்காதரனுக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

உடனே அவரை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் கங்காதரன் பரிதாபமாக உயிரிழந்தார். கங்காதரன் விஷம் குடித்து இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ்காரர் கங்காதரன் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்தாரா? அல்லது பணி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாங்குநேரி இடைத்தேர்தல் பணிக்கு வந்த போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...