நிலக்கோட்டை,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நடராஜர் கோவில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் கட்டிடம் பழுதடைந்ததையொட்டி, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. தற்போது வரை கட்டிட பணி நடந்து வருகிறது.
இதனால் கோவிலில் இருந்த ஐம்பொன்னால் ஆன நடராஜர், சிவகாமியம்மன், மாணிக்கவாசகர் சிலைகளும், கல்லால் ஆன விநாயகர், முருகன், ராகு, கேது உள்ளிட்ட 10 சிலைகளும் நிலக்கோட்டை அகோபில நரசிம்ம பெருமாள் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அந்த சிலைகளுக்கு தினமும் பூஜை செய்யப்பட்டு வந்தன.
இந்தநிலையில், கோவிலில் உள்ள 10 கற்சிலைகள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானது. இது தொடர்பாக நிலக்கோட்டை பெரியார் காலனியை சேர்ந்த கனிக்குமார் (வயது 40) என்பவர், தமிழக அரசு மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு புகார் மனு அனுப்பி இருந்தார்.
அதில், நிலக்கோட்டை அகோபில நரசிம்ம பெருமாள் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 10 கற்சிலைகள் திருடப்பட்டதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் தொடர்பாக நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் விசாரணை மேற்கொண்டார்.
அதில் கடத்தப்பட்ட சிலைகள், நிலக்கோட்டை-வத்தலக்குண்டு சாலையில் மணியக்காரன்பட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வைத்து பூஜைகள் செய்ததை அந்த புகைப்படம் உறுதி செய்தது.